1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு..!
Release of the Annual Examination Schedule for the 2025 to 2026 Academic Year for Students in Grades 1 through 9
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு 01 முதல் 09 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி 01 முதல் 09-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
01- ஆம் வகுப்பு முதல் 03- ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 08-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 ஆம் வரை தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதேபோல், 04மற்றும் 05-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 06-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.
அடுத்து, 06 முதல் 09-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 01-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.
16ஆம் தேதியோடு தேர்வுகள் நிறைவடைந்து 17ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும். அதன்பிறகு 2026 – 2027ஆம் கல்வியாண்டிற்கான முதல் வேலை நாள் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Release of the Annual Examination Schedule for the 2025 to 2026 Academic Year for Students in Grades 1 through 9