2026 சட்டமன்ற தேர்தல் ; கோவையில் கொடி நாட்ட போவது யார்..? மீண்டும் அதிமுக வசமா.? திமுகவின் 2.0 வியூகம் வழி வகுக்குமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த தேர்தலில போது கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இம்முறை ஆளும் திமுக அரசின் 2.0 வியூகம் + அதிமுகவின் கொங்கு கோட்டை என்ற பிம்பமும் எதிர் எதிர் மோதிக்கொள்வதால், கோவை மாவட்டத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

கோவை தெற்குத் தொகுதி;

பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் வசம் உள்ளது. இங்கு தெலுங்கு பேசும் மக்கள், தேவாங்கர் செட்டியார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். இந்தத் தொகுதியில் சுமார் ஒரு லட்சத்து எழுபத்தொன்பதாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனுடன் கடும் போட்டிக்கு மத்தில் ஆயிரத்து எழுநூற்று இருபத்தெட்டு வாக்குகள் வித்தியாசத்தில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார்.

கோவை வடக்குத் தொகுதி;

இந்த தொகுதியில், அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இங்கு இரண்டு லட்சத்து எழுபத்தெட்டாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில், கவுண்டர் மற்றும் போயர் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். மருதமலை முருகன் கோயில் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இத்தொகுதி, அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்படுகிறது.

சிங்காநல்லூர் தொகுதி;

தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த தொகுதியில் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பத்து நான்காயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த முறை அதிமுகவின் கே.ஆர்.ஜெயராம் இங்கு வெற்றி பெற்றார். நாயுடு சமூக மக்களின் வாக்குகள் இங்கு வெற்றியைத் தீர்மானிக்கிறது. இங்கு சிறு மற்றும் குறு தொழில்களின் தேவைகளே இங்கு பிரதான தேர்தல் கோரிக்கையாக ஒலிக்கின்றன.

தொண்டாமுத்தூர் தொகுதி;

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்ற வி.ஐ.பி தொகுதியாகத் தொண்டாமுத்தூர் விளங்குகிறது. இரண்டு லட்சத்து எழுபத்திரண்டாயிரம் வாக்காளர்களைக் கொண்ட இத்தொகுதியில் கவுண்டர் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், அருந்ததியர் மற்றும் ஒக்கலிக கவுடர்கள் அடுத்தடுத்த நிலையிலும் உள்ளனர். பேரூர் ஆதீனம் மற்றும் கோவை குற்றாலம் ஆகியவை இத்தொகுதியின் முக்கிய அடையாளங்களாகும்.

கவுண்டம்பாளையம் தொகுதி;  

கோவை மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகும். இங்கு சுமார் மூன்று லட்சத்து எழுபத்தேழாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவின் அருண்குமார் ஆவார். இங்கு ஐடி நிறுவனங்கள் நிறைந்த சரவணம்பட்டி மற்றும் மத்திய போலீஸ் பயிற்சி மையம் உள்ளன. வேளாளக் கவுண்டர்கள் மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் இங்கு வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கின்றனர்.

சூலூர் தொகுதி;

விவசாயம் சார்ந்த தொகுதியாக உள்ளது. இங்கு இரண்டு லட்சத்து தொண்ணூற்று மூவாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அதிமுகவின் வி.பி.கந்தசாமி இங்கு சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். விமானப்படைத் தளம் அமைந்துள்ள இத்தொகுதியில் கவுண்டர் மற்றும் தேவர் சமூக மக்களின் வாக்குகள் வெற்றியை உறுதி செய்கின்றன.

பொள்ளாச்சி தொகுதி;

அதிமுக பொள்ளாச்சி ஜெயராமன் வசம் உள்ள தொகுதி. தென்னை விவசாயம் மற்றும் நார் தொழிற்சாலைகள் நிறைந்த பொள்ளாச்சி தொகுதியில், ஒரு லட்சத்து தொண்ணூற்றாராயிரம் வாக்காளர்கள் உள்ள இங்கு கவுண்டர் மற்றும் செட்டியார் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். பசுமை நிறைந்த ஆனைமலை வனப்பகுதி இத்தொகுதியில் உள்ளது.

கிணத்துக்கடவு தொகுதி;

கிணத்துக்கடவு தொகுதியில் இரண்டு லட்சத்து எண்பத்து மூவாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதி தற்போது அதிமுகவின் தாமோதரன் வசம் உள்ளது. தக்காளி மற்றும் தென்னை விவசாயம் இங்கு பிரதான தொழில்.

வால்பாறை தொகுதி;

கோவை மாவட்டத்தின் ஒரே தனித்தொகுதியாக உள்ளது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் புகலிடமாக உள்ளது.  இங்கு தொண்ணூறு சதவீத மக்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு ஒரு லட்சத்து அறுபத்து எட்டாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதிமுகவின் அமுல் கந்தசாமி மறைந்து விட்டார். இங்கு தேயிலை தோட்டம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்குகிறது.

மேட்டுப்பாளையம் தொகுதி;

நீலகிரியின் நுழைவாயிலான மேட்டுப்பாளையம் தொகுதியில், அதிமுகவின் ஏ.கே.செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இங்கு இரண்டு லட்சத்து அறுபத்தொன்பதாயிரம் வாக்காளர்கள் உள்ளனர். பவானி ஆறும், வாழை விவசாயமும் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளன. வன்னியர், கவுண்டர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் இங்கு பரவலாக உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who will capture Coimbatore District in the 2026 Assembly Elections


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->