காஞ்சிபுரத்தில் வீடு புகுந்து இளம்பெண் அடித்து கொலை! வீட்டில் கூட பாதுகாப்பு இல்லாத வெட்கக்கேடான நிலை - அதிமுக கண்டனம்!
Kanjipuram murder case ADMK Condemn to DMK
காஞ்சிபுரம் மாவட்டம், திம்மசமுத்திரம் அருகே பாலாஜி நகரில் உள்ள அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த இளம் பெண், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக, கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
8 பவுன் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், குற்றம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், இது வரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "காஞ்சிபுரத்தில் 8 பவுன் நகைக்காக தாக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
5 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை முழுமையாக கைது செய்ய முடியாமல் திணறும் திமுக அரசின் காவல்துறை!
"ஆக.. குற்றவாளிகள் கைது" என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு பாதாளத்திற்கு சென்ற சட்டம் ஒழுங்கு!
பெண்களுக்கு வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை என்ற வெட்கக்கேடான நிலைக்கு தமிழ்நாட்டை தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசு" என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
English Summary
Kanjipuram murder case ADMK Condemn to DMK