"அதிமுகவுக்கு மட்டுமே எதிரியும், துரோகியும் உள்ளனர்".. முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சால் பரபரப்பு..!!
Kamaraj said Only AIADMK has enemy and traitor
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் "தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அவர் தொடங்கிய இந்த இயக்கத்தை எவராலும் எதுவும் செய்ய முடியாது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கு இருந்த மாஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது.

ஒன்றரை கோடி தொண்டராக இருக்கக்கூடிய இந்த இயக்கத்தை இரண்டு கோடி தொண்டராக உயர்த்த வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி விருப்பப்பட்டு அனைத்து நிர்வாகிகளிடமும் பேசி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறார்.
நீங்களும் இந்த திருவாரூர் மாவட்டத்தில் தொகுதிக்கு 75000 பேர் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். மற்ற கட்சிகளில் எல்லாம் எதிரிகள் மட்டும் தான் இருப்பார்கள். ஆனால் அதிமுகவிற்கு மட்டும்தான் எதிரிகளும், துரோகிகளும் இருப்பார்கள்.

ஒரே நேரத்தில் எதிரிகளையும் துரோகிகளையும் வெல்லக்கூடிய வல்லமை படைத்த அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி வென்று காட்டியுள்ளார். இன்று ஓபிஎஸ் மற்றும் அவருடன் இருக்கும் நான்கு பேர் திமுகவுக்கு துணை போகிறார்கள். இது வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரியும். அதனால்தான் அதிமுக தொண்டர்களே அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால்தான் அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள்" என தொண்டர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசி உள்ளார்.
English Summary
Kamaraj said Only AIADMK has enemy and traitor