"தற்கொலை குறித்து யோசித்த கமல்ஹாசன்! எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


"தற்கொலை குறித்து நானும் யோசித்திருக்கிறேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

இன்று (23-09-2023) சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் உரையாற்றினார்.

ஜனநாயகத்தின் முக்கியத்துவம், அதைக் காப்பதில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசிய அவர், மாணவர்கள் ஒவ்வொருவரும் பெரியதொரு இலட்சியத்தை மனதில்கொண்டு அதைநோக்கி வீறுநடை போடவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், தன்னைச் செதுக்கிச் செழுமைப்படுத்திய தனது பெற்றோர், ஆசிரியர்களை நினைவுகூர்ந்த தலைவர் தனது கலைப்பயணத்தில் எதிர்கொண்ட சோதனைகள், அதை எதிர்கொண்ட விதம் பற்றிக் குறிப்பிட்டார்.

அப்போது "தற்கொலை குறித்து 20, 21 வயது இருக்கும் போது நானும் யோசித்து இருக்கிறேன் என தெரிவித்தார். 

கலை உலகம் என்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் அவ்வாறு யோசித்து இருக்கிறேன் எனவும், வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும், ஒருபோதும் அவசரப்பட கூடாது எனவும் அவர் தெரிவித்தார். 

மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் அது வரும்போது வரட்டும், நீங்களாக தேடாதீர்கள் எனவும் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kamalhassan speaks about his past think to commit suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->