திமுக கூட்டணியில் கம்னியூஸ்ட்கள் கட்சிகளின் பரிதாப நிலை.! தலையை தொங்க போட்டுகொண்டு வெளியேறிய தலைவர்.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக, திமுக அல்லாத ஒரு கூட்டணிக்கும் தமிழகத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் முதல் கூட்ட்டணி தொகுதி பங்கீடாக அதிமுக-பாமக தொகுதி பங்கீடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளை ஒதுக்கியும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியும் திமுக ஒப்பந்தம் போட்டு கையெழுத்திட்டுள்ளது.

காங்கிரஸ், கம்னியூஸ்ட், மதிமுக, விசிக-வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த நான்கு கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையும் சுமுகமாக நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் திமுகவுடன் முதல்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டுஅண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியே வரும்போது தலையை நிமிர்த்தாமல் கவலையுடன் வந்தார். செய்தியர்களையும் சந்திக்காமல் புறப்பட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K BALAKRUSHNAN UPSET WITH DMK


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->