திமுக தலைவர் மு க ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்த தமிழகத்தின் முக்கிய புள்ளிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளடித்து. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் அமர உள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார். 

இதனிடையே நேற்று மலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், 125 திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட  8 எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க ஸ்டாலின், இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். 

இந்நிலையில், நாளை மறுநாள் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலினை தமிழகத்தில் உள்ள மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனர்கள் நேரில் சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் உதவித் துணைத்தலைவர் மணிகண்டன் நாயர் மற்றும் பொது மேலாளர் மெய்யப்பன், தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினமணி நாளிதழின் ஆசிரியர் கி.வைத்தியநாதன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

journalists meet mk stalin


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->