#BigBreaking || எடப்பாடி கே பழனிச்சாமி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்., அதிகாரபூர்வமாக அறிவித்த ஜெயக்குமார்.! - Seithipunal
Seithipunal


ஏற்கனவே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக இந்த தகவல் தெரிவிக்கின்றது. 

இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி கே பழனிசாமி பங்கேற்றுள்ளார்.

சுமார் 65 தலைமை கழக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பன்னீர்செல்வத்தை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கும், அந்த பொருளாளர் பதவியை யாருக்குக் கொடுப்பது என்ற முடிவும் எட்டப்படாத உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தெரிவிக்கையில், இந்த கூட்டத்தில் 65 தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். 5 பேர் வரவில்லை.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் : வருகின்ற ஜுலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் போட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் முடிவுகள் செய்யப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை நிர்வாகிகள் பொறுப்பேற்று கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர்.

மேலும், பல விவகாரங்கள் குறித்து இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முடிவு எடுக்கப்பட்ட விவரங்கள் குறித்து இப்போது செய்தியாளர்களுக்கு சொல்ல முடியாது. இன்று பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyakumar say about eps meet now


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->