ஜாமீன் மனு., ஒரே நாளில் இரு தீர்ப்புகள்., முன்னாள் அமைச்சர் வெளியில் வருவதில் சிக்கல்.!  - Seithipunal
Seithipunal


திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் உத்தரவில் தெரிவித்தது.

காயம்பட்ட அடைந்ததாக கூறப்பட்ட திமுக பிரமுகர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதால், காவல்துறை தரப்பில் ஜெய்குமாருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க சம்மதம் தெரிவித்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் அவருக்குகடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதும், ஜெயகுமார் மீது நில அபகரிப்பு வழக்கில் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால், அவர் தற்போது சிறையில் இருந்து வெளியே வருவதற்கு சிக்கல் இருந்தது.

இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்மூலம் ஜெயக்குமார் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyakumar bail case chengalpattu march


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->