மோடி "ஓ.பி.சி" கிடையாது; பகீர் கிளப்பும் I.N.D.I கூட்டணி கட்சி!!
JD senior leader Neeraj Kumar accused Modi is not OBC
பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பதற்கு காரணமே தம்மை ஓபிசி என சொல்லி வரும் பொய் அம்பலமாகிவிடும் என்பதால்தான் என பகிர் கிளப்பி உள்ளது ஐக்கிய ஜனதா தளம்!!
பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நீரஜ்குமார் இதுகுறித்து செய்தியியலார்கள் சந்திப்பில் பேசியதாவது "பிரதமர் நரேந்திர மோடி மோத் காஞ்சிஎங்க சமுதாயத்தை சேர்த்தவர். இது சமூக ரீதியாகவோ, கல்வி ரீதியாகவோ பிற்படுத்தப்பட்ட ஜாதிய பிரிவுகளில் வரத்து. அவ்வாறு இருக்க நரேந்திர மோடி எப்படி ஓபிசி பிரிவில் தன்னை சேர்த்துக்கொள்ள முடியும்? அந்த சமூகம் எப்படி ஓபிசி பட்டியலில் சேர்ந்தது? இது தொடர்பாக ஏதேனும் சமூக அல்லது பொருளாதார ஆய்வுநடத்தப்பட்டதா? அவ்வாறு செய்திருந்தால் அந்த அறிக்கையை வெளியிடுவார்களா?

2019-ம் ஆண்டு பிரதமர் மோடி தம்மை இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என பிரகடனப்படுத்திக்கொண்டார். மோடி சமுதாயம் ஓபிசி பட்டியலில்தான் இருக்கிறதா? அறிவிக்கையை பகிரங்கப்படுத்துவீர்களா? பிரதமர் மோடி முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மோடி சமுதாய முன்னோர் தங்களை முற்படுத்தப்பட்ட வகுப்பினராகத்தான் அறிவித்து கொண்டார்கள். ஆனால் பிரதமர் மோடி தம்மை ஓபிசி என பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாரா? பாஜகவே இதற்கு பதில் சொல்லட்டும்.

பிரதமர் மோடியின் சமூகம் எந்த பிரிவின் கீழ் வருகிறது என்று அம்பலமாகிவிடும் என்பதாலேயே ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை அவர் விரும்பவில்லை. நரேந்திர மோடிஇந்திய மக்களை ஏமாற்றி விட்டார். எங்களின் குற்றச்சாட்டு உண்மையா பொய்யா? என்பதற்கு பாஜகதான் பதில் சொல்ல வேண்டும். பிரதமர் மோடி ஓபிசி ஜாதியை சேர்ந்தவரா? அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி தமது ஜாதியை ஓபிசி பட்டியலில் மோசடியாக சேர்த்தாரா? என்பதை பாஜகதான் விளக்க வேண்டும்" என குற்றம் சாட்டியுள்ளார்
English Summary
JD senior leader Neeraj Kumar accused Modi is not OBC