வரலாறு போற்றும் ஜானகி அம்மாள்...! - நினைவு தினத்தில் இபிஎஸ் செலுத்திய உணர்வுப்பூர்வமான புகழஞ்சலி...! - Seithipunal
Seithipunal


மறைந்த நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி ராமச்சந்திரன், தமிழக அரசியல் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், 1988-ஆம் ஆண்டு 23 நாட்கள் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்து அரசியல் அரங்கில் முக்கிய முத்திரை பதித்தார். பின்னர், 1996-ஆம் ஆண்டு மே 19-ந்தேதி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஜானகி ராமச்சந்திரனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அவருக்கு மரியாதை செலுத்தி நினைவஞ்சலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முன்னாள் தமிழக முதல்வரும் எங்கள் இதயத் தெய்வமுமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் துணைவியார் ஜானகி இராமச்சந்திரன் அம்மையாரின் நினைவு நாளில், புரட்சித் தலைவரின் தொண்டர்கள் மீது அவர் கொண்டிருந்த தூய்மையான பாசத்தையும் அன்பையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஜானகி அம்மையாரின் நூற்றாண்டு விழாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடியதுடன், அவரது முழுவுருவப் படம் கழக தலைமைக் கூட்ட அரங்கில் நிறுவப்பட்டிருப்பதை இந்த தருணத்தில் பெருமையுடன் நினைவுகூர்கிறேன்” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Janaki Ammal who cherishes history EPS emotional tribute Memorial Day


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->