மீண்டும் பச்சை பொய் பேசிய இயக்குனர் ஞானவேல்.! அறிக்கையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.! மீண்டும் கொந்தளிக்கும் தமிழ்க்குடி.! - Seithipunal
Seithipunal


ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வெறி பிடித்த கொடுமைக்கார சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி கிருஸ்துவ முதலியார் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் திட்டமிட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதே பெரும் அநீதி.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவு படுத்தும் வகையில் வன்னியர்களுக்கு புனிதமான அக்னி குண்டத்தை வைத்து சத்ரியர் என்ற அடிக்குறிப்பு போட்டு கொலையாளிகளாகக் காண்பித்தால் வந்தது தான் இந்த பிரச்னை.

இன்று எதற்கும் துணிந்தவர்கள், அந்தோணிசாமி என்று பெயர் வைப்பதற்கு பயந்து குருமூர்த்தி என்று பெயர் அரசியல் செய்து, குறவர் சமுதாயத்தை இருளர் சமுதாயமாக மாற்றி, வட தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய சமுதாயத்திற்கும் சாதிக் கலவரத்தை தூண்டி பெயர் அரசியல் செய்து கொண்டு இருக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவரும் வன்னியர் அல்ல, கொலை செய்தவரும் வன்னியர் அல்ல, கொலை செய்யப்பட்டவருக்காக வழக்காடியவரும் வன்னியர் அல்ல, உதவி செய்தவர்கள் மட்டுமே வன்னியர்கள் என்று உண்மை நிலவரம் இருக்கும் போது, எதற்கு வன்னியரின் சின்னமான அக்னி குண்டத்தை கொலையாளியின் வீட்டில் நட்ட நடுவில் மாட்டி வைத்தீர்கள்? என்ற நியாயமான கேள்வி கூடவா உங்கள் மனங்களில் எழவில்லை.

இந்த நிலையில், படத்தின் இயக்குனர் ஞானவேல் உளமாற வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் அறிக்கையில் மீண்டும் ஒரு பச்சை பொய் ஒன்றை தெரிந்தே சொல்லியிருப்பது அம்பலமாகியுள்ளது. 

அக்னி கலசத்துடன் கூடிய அந்த வன்னியர் சங்க காலண்டரை இரண்டாம் தேதியே மாற்றிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் படம் 1ஆம் தேதி இரவு அமேசானில் வெளியாகியது. அந்த காலண்டர் புகைப்படம் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி இரவு தான் நீக்கப்பட்டது.

5 நாட்களாக அந்த கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க காலண்டர் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட உண்மையை பேசாத இந்த இயக்குனர்., இந்த படத்தில் எவ்வளவு பொய்களையும்., திட்டமிட்ட வன்மத்தையும், தமிழ்குடிக்குள் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் வைத்திருப்பார் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று சமூக தளத்தில் பலரும் தனது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் பதிவில், "ஜெய் பீம் படம் வெளியானது 2 ஆம் தேதி. ஆனால், 6 ஆம் தேதி தான் காலண்டர் மாற்றி அமைக்க பட்டது. 

திரும்ப திரும்ப பொய் பேசும் பொய்ப்பீம் இயக்குனர்.

படம் வெளியான நவம்பர் 2 ஆம் தேதி விடியற்காலையில் இருந்தே சமூகவலை தளங்களில்  எதிர்ப்பு கிளம்பியது. அதை தொடர்ந்து கண்மணி குணசேகரன் அவர்கள் இயக்குனரை தொடர்பு கொண்டு பேசிய பிறகு, நவம்பர் 6 ஆம் தேதி தான் காலண்டர் படம் மாற்றி அமைக்கப்பட்டது. 

 

யாரும் கேட்கும் முன்பே காலண்டர் படம் மாற்றி அமைக்கப்பட்டதாக இயக்குனர் மீண்டும் பொய் பிரச்சாரம் செய்வது எவ்வளவு கேவலமான செயல்.

கவிஞர் கண்மணி குணசேகரன் பதிவு: 
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jai bhim director again lie


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal