'தவெகவிற்கு ஆதரவு இல்லை'; பின்வாங்கி கொண்ட ஐயூஎம்எல்; விஜய்க்கு மீண்டும் சிக்கல்...?
IUML withdraws support stating it does not back TVK
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும், ஆட்சியமைக்க பெருபான்மை இல்லாத காரணத்தில் தவெக ஆட்சியமைக்க இழுபறி நீடித்தது.
இந்நிலையில், தவெகவிற்கு ஆதரவாக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தையும், இடதுசாரி கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அதற்கிடையில், திமுகவின் மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), தங்களது ஆதரவு தவெகவிற்கு ஆதரவு என்று அறிவித்ததாக பிரதான செய்தி சேனல்களில் செய்திகள் வெளியாகின.

சில தினங்களுக்கு முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த ஐ.யூ.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன், 30 ஆண்டு காலமாக திமுகவுடன் பயணித்து வருகிறோம். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கிறாரோ, அதுவே எங்கள் நிலைபாடு எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று மாலை ஐ.யூ.எம்.எல். அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டு, அந்த முடிவை அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு இல்லை என அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் மீண்டும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். எனவே, தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 120 இல் இருந்து 118 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், தவெகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் விஜய் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஐ.யூ.எம்.எல். வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்று பாபநாசம், வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் முறையே ஏ.எம். எஸ்.எஸ்.பி.சையத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.பாரூக் பாஷா , ஷாஜஹான், ஆகியோர் தமிழகத்தில் ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்படுவதற்கு திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு மனதோடு வரவேற்கிறது.
சட்டமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினுடைய இரண்டு உறுப்பினர்களும் மேதகு ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.'' என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.
English Summary
IUML withdraws support stating it does not back TVK