கரூர் திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சகோதரி வீட்டில் IT சோதனை.!!
ITraid in Karur DMK former district secretary sister house
தமிழக முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் கரூரில் உள்ள திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசன் சகோதரி வீட்டில் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டம் செங்குந்தபுரம் பெரியார் நகரில் உள்ள வாசுகி முருகேசன் சகோதரி பத்மா வீட்டில் வருமான வரி சோதனையானது நடைபெற்று வருகிறது. 3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோன்று கரூர் மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று கார்களில் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்யும் அனைத்து இடங்களிலும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது அமைச்சர் எ.வ வேலுவுக்கு நெருக்கமானவரின் நிதி நிறுவனம் என தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
ITraid in Karur DMK former district secretary sister house