விஜய் தமிழரா? தெலுங்கரா? சமூக வலைதளங்களில் சாதி, மொழி விவாதம் தீவிரம்! விஜய் உண்மையில் யார்? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் 18வது முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு, திரைப்பட நடிகராக இருந்து அரசியல் கட்சி தொடங்கி தமிழக முதல்வராக உயர்ந்திருக்கும் முதல் நபர் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார். சுமார் 49 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரசியல் நிகழ்வு தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா உள்ளிட்ட குடும்பத்தினரும், நடிகை த்ரிஷா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். குறிப்பாக த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்தது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் புதிய விவாதங்கள் கிளம்பியுள்ளன. சிலர் விஜய்யை “தமிழர்” எனக் கொண்டாட, மற்றொரு தரப்பு “தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்தவர்” எனக் கூறி பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். அதேபோல், அவருடைய சாதி அடையாளம் குறித்தும் பல்வேறு தரப்பினரிடையே விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் முன்பு அளித்த பேட்டிகளில், தாம் கிறிஸ்தவ பின்னணியைச் சேர்ந்தவர் என்றும், தனது மனைவி ஷோபா முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியிருந்தார். அந்த பழைய வீடியோக்களை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விஜய்யின் பூர்வீகம் தொடர்பாகவும் பல தகவல்கள் பேசப்படுகின்றன. அவரது குடும்பத்தின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியத்துக்குட்பட்ட முத்துப்பேட்டை கிராமம் என கூறப்படுகிறது. எஸ்.ஏ. சந்திரசேகரின் தாயார் அரசு பள்ளி ஆசிரியையாகவும், தந்தை சேனாதிபதி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராகவும் பணியாற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமநாதபுரத்தில் கல்வி கற்ற சந்திரசேகர் பின்னர் சென்னை வந்து திரைப்பட இயக்குநராக உயர்ந்தார். தொடர்ந்து அவரது குடும்பம் சென்னையிலேயே நிரந்தரமாக குடியேறியது குறிப்பிடத்தக்கது.

அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “ஒரு தலைவர் முதல்வராக பதவியேற்கும் தருணத்தில், அவரது சாதி அல்லது மொழி அடையாளத்தை விட அவர் எப்படிப்பட்ட ஆட்சி வழங்கப் போகிறார் என்பதில்தான் கவனம் இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is Vijay a Tamilian A Telugu Caste and language debate rages on social media Who is Vijay really


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->