திமுக-வில் பெரிய மாற்றம் வருதா..? - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டும் திமுக தலைமை...! - பரபரக்கும் தமிழக அரசியல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக, சுமார் ஆறு தசாப்தங்களுக்கு பிறகு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு முக்கிய கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக புதிய அரசியல் சக்தி ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ளார்.இந்த தேர்தலில் தி.மு.க. தனித்து 60 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியை சந்தித்தது கட்சித் தொண்டர்களிடையே அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில், முன்னாள் அமைச்சரவையில் இடம்பிடித்திருந்த உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மெய்யநாதன் மற்றும் ரகுபதி உள்ளிட்டோர் வெற்றி பெற்று மீண்டும் சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ளனர்.

மறுபுறம், துரைமுருகன், மா.சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தா.மோ.அன்பரசன் மற்றும் நாசர் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

இதனையடுத்து, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த சூழலில், வரும் 14-ந்தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 14-05-2026 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is there big change coming DMK DMK leadership convene meeting district secretaries Tamil Nadu politics turmoil


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->