கூட்டணிகளை தூளாக்கும் தலைவர் விஜய்? த.வெ.க. கூட்டத்தில் வெடித்த அரசியல் முழக்கம்! - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
Is leader Vijay shattering alliances Political slogans erupt tvk meeting Sengottaiyan sensational speech
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் இன்று உற்சாகமாக தொடங்கியது. மேடையில் முதலில் விஜய் தனது கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து த.வெ.க. கொள்கைப் பாடல் இசைக்கப்பட்டு, கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருமித்த குரலில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால், மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்ச்சிக்கு உணர்ச்சிகரமான தொடக்கம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய த.வெ.க. நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன், விஜயை புகழ்ந்து தெரிவித்ததாவது,“தமிழ்நாட்டில் தி.மு.க.வை வீழ்த்தும் அரசியல் வல்லமை கொண்ட ஒரே தளபதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்தான்.
கூட்டணிகளை சிதறடிக்கும் சக்தி விஜய்க்கு மட்டுமே உண்டு.தி.மு.க., அ.தி.மு.க.வில் இன்று உண்மையான தலைவர்கள் இல்லை.
எம்.ஜி.ஆருக்கு பிறகு, மக்களின் பேராதரவை பெற்ற செல்வாக்கு மிக்க தலைவராக விஜய் திகழ்கிறார்.இவ்வாறு அவர் உற்சாகமாக தெரிவித்தார்.
English Summary
Is leader Vijay shattering alliances Political slogans erupt tvk meeting Sengottaiyan sensational speech