பதிலளிக்க முடியாத அரசுக்கு தடியடிதான் ஆயுதமா...? - மக்கள் குரலை நசுக்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக  கமல்ஹாசன் எம்.பி. சீற்றம்...! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு விவகாரம் தொடர்பான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் கட்சியினரும் ஏராளமான இளைஞர்களும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசன், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,“ஒரு குழந்தை அழுதபோதே நாம் அதன் குரலைக் கவனித்திருக்க வேண்டும். ஆனால், நமது குழந்தைகள் பலர் உயிரிழக்கும் வரை நாம் காத்திருந்துவிட்டோம்.

கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சி மையங்களும், ஆர்வத்துக்குப் பதிலாகப் பதற்றமும், தகுதிக்குப் பதிலாக முறைகேடுகளும் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பு சீரழிந்த அமைப்பாகவே கருதப்படும்.கேள்விகளுக்கு விடைகள் கிடைக்க வேண்டிய இடத்தில், குழந்தைகளுக்கு தடைகளும் தடியடிகளும் மட்டுமே கிடைக்கும்போது, அந்த நாடு தோல்வியடைந்ததாகவே பொருள்.

இந்தியாவின் குழந்தைகளே, நீங்கள்தான் நம்மில் மிகச் சிறந்தவர்கள். உங்கள் கடமையை நீங்கள் சிறப்பாகச் செய்துவிட்டீர்கள். இனி, உங்களுக்கான கடமையைச் செய்ய வேண்டியது நாட்டின் பொறுப்பு.உங்கள் கனவுகள் எப்போதும் உயரமாகவும், பெரிதாகவும் இருக்கட்டும்" என கமல்ஹாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is baton wielding weapon against government that cannot respond Kamal Haasan MP anger against authorities who suppressing voice people


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->