ஈரான் எங்களிடம் மன்றாடுகிறது...! உண்மையைச் சொல்கிறாரா டிரம்ப்...? - அதிரும் சர்வதேச அரசியல் களம்
Iran begging us Trump telling truth shaking international political arena
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள முற்றுகையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து எந்தவிதமான விவாதத்திற்கும் இடமில்லை என்றும், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்றும் ஈரான் தொடர்ந்து தெளிவாக தெரிவித்து வருகிறது.

ஆனால், இதற்கு முற்றிலும் மாறான குரலில், அமெரிக்க முன்னாள் தலைவர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளத்தில் அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் தனது Truth Social தளத்தில் பகிர்ந்த பதிவில், “ஈரான் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார சரிவின் விளிம்பில் உள்ளது என அமெரிக்காவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.
தங்களின் தலைமைத்துவ குழப்பங்களை சரிசெய்ய அவசர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், ஹார்முஸ் நீரிணையை திறக்க அமெரிக்கா விரைவாக செயல்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஈரான் அரசாங்கத்தின் உள்புறத்தில் நிலவும் கருத்து முரண்பாடுகளை அவர்கள் விரைவில் சமாளித்து விடுவார்கள் என தாம் நம்புகிறேன் என்றும் டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த தகவலை ஈரான் தரப்பில் யார் பகிர்ந்தனர், குடியரசுக் கட்சி நிர்வாகத்தில் யார் அதை ஏற்றுக்கொண்டனர், மேலும் இந்த தகவல் பரிமாற்றங்கள் அமெரிக்காவுடன் நேரடியாக நடந்ததா அல்லது இடைத்தரகர் மூலம் நடைபெற்றதா என்ற கேள்விகளுக்கு வெள்ளை மாளிகை தரப்பிலிருந்தோ அல்லது டிரம்ப் அணியிலிருந்தோ இதுவரை தெளிவான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை.
English Summary
Iran begging us Trump telling truth shaking international political arena