கமலுக்கு வலுக்கும் கண்டனம்: ''மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 'தக் லைப்' படத்தை தடை செய்வோம்" என எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


'தக் லைப்' பட விழாவில் 'தமிழில் இருந்து பிறந்தது கன்னட மொழி' என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். இதற்கு கர்நாடகாவில்  கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை தொடர்ந்து, கமல்ஹாசனை கண்டித்து பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி-தார்வார், பெலகாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்பினர் போராட்டங்களை நடத்தியுள்ளனர். மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கன்னட எழுத்தாளர்கள், திரைத்துறையினரும்  கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது: "தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கன்னடத்திற்கு மிக நீண்ட வரலாறு உள்ளது. இது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:- எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது என்பது பற்றி கூற அவர் ஒன்றும் வரலாற்று நிபுணர் இல்லை.

2½ ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட கன்னட மொழிக்கு இந்திய வரைபடத்தில் தனி அடையாளம் உள்ளது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது. கன்னடர்கள் பிற மொழிகளை வெறுப்பவா்கள் அல்ல. ஆனால் கன்னட நாடு, மொழி, மக்கள், நீர், நிலம் போன்ற விஷயங்கள் வரும்போது, சுயமரியாதையை எப்போதும் இழக்க மாட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கன்னட வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, கமலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, "கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியது சரியல்ல. இதை நான் கண்டிக்கிறேன். கமல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக் லைப் படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம்" என்று கூறியுள்ளார். இந்த விடயம் தற்போது கமலுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

If Kamal doesnt apologize we will ban the film Thug Life warns Karnataka Minister Sivaraj


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->