'மக்களுக்கு தெரிய வேண்டிய உண்மையை வெள்ளை அறிக்கை மூலம் வெளியிடுவேன்'...! - கோட்டையில் அதிரடி காட்டும் முதல்வர் விஜய்!
I reveal truth that people need know through white paper Chief Minister Vijay shows action
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே, மக்கள் நலனை முன்னிறுத்தும் வகையில் மூன்று முக்கிய அரசாணை கோப்புகளில் விஜய் தனது முதல் கையெழுத்தை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரை, அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், “வறுமையின் வலி என்ன, பசியின் கொடுமை என்ன என்பதை நேரில் உணர்ந்தவனாக நான் இருக்கிறேன். அரச குடும்ப பின்னணியில் இருந்து வந்தவன் அல்ல; சாதாரண மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களுக்குள் இருந்து உயர்ந்தவன்” என்று உருக்கமாக குறிப்பிட்டார்.
மேலும், “நான் தேவதூதன் அல்ல. உங்களைப் போன்ற சாதாரண மனிதன் தான். மக்களை மயக்கும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றும் அரசியலை நான் மேற்கொள்ள மாட்டேன்” என்று உறுதியுடன் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும், “தமிழக அரசின் பொருளாதார களஞ்சியம் வெறிச்சோடிய நிலையில் உள்ளது.
முந்தைய ஆட்சியாளர்கள் அனைத்தையும் காலி செய்து விட்டுச் சென்றுள்ளனர்” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.தனக்கு எதிராக செயல்பட்டவர்களாக இருந்தாலும், அவமானங்களையும் துன்பங்களையும் அளித்தவர்களாக இருந்தாலும், அரசியல் வேறுபாடு பாராமல் அனைவரும் தன்னுடைய மக்கள் தான் என உணர்ச்சிபூர்வமாக பேசிய விஜய், “நண்பர், எதிரி என்ற பாகுபாடு எதுவுமில்லை; 8 கோடி தமிழர்களும் என் குடும்பம்” என்று தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
I reveal truth that people need know through white paper Chief Minister Vijay shows action