மகள் முகம் பார்த்த மாவீரன்...! சீமானின் கைகளில் தவழும் குட்டி தேவதை...! - வைரலாகும் நெகிழ்ச்சிப் படம்...! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தம்பதியினரின் இல்லத்தில் மீண்டும் குழந்தை சிரிப்பு ஒலித்துள்ளது.

இவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகராக பதவி வகித்த மறைந்த கே. காளிமுத்துவின் மகளான கயல்விழியை, சீமான் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு “மாவீரன்” என பெயரிடப்பட்டது.

இந்நிலையில், ஏழு ஆண்டுகள் கழித்து பிறந்துள்ள தனது தங்கையை பார்த்து மாவீரனும் பேரானந்தத்தில் திளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பிறந்த குழந்தையின் வரவு குடும்பத்தில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், மருத்துவமனையில் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் இருவரும் வீடு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அதேநேரத்தில், மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தையை கையில் ஏந்தியபடி மகிழ்ச்சியுடன் நிற்கும் சீமானின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hero who saw his daughter face little angel crawling arms Seeman touching picture that goes viral


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->