இன்னைக்கு அவங்களுக்கு...நாளைக்கு உங்களுக்கு..! - திமுக வுக்கு எதிராக நாஞ்சில் சம்பத் பரபரப்பு எச்சரிக்கை...! - Seithipunal
Seithipunal


உடுமலை அருகிலுள்ள அமராவதி நகரில், ஆக்ஸ்போர்டு சைனிக் பள்ளி எதிரே அமைந்துள்ள மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி விழா, புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு அப்பகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தையும் ஈர்த்தது.நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த கிறித்தவ அமைப்பின் நிர்வாகி செந்தில்குமார் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

புதிய உறுப்பினர்களுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாஞ்சில் சம்பத் தனது உரையில், “தமிழக வெற்றிக் கழகம் என்பது சாதாரண அரசியல் இயக்கம் அல்ல; அது தமிழகத்தின் புதிய எழுச்சிக்கான மாற்றுப் பாதை. தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, இன்று தமிழக அரசியலில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உயர்ந்துள்ளது” என வலியுறுத்தினார்.

மேலும் அவர் பேசுகையில், “கட்சியின் கொள்கைகள், அடிமட்ட தொண்டர்களின் உழைப்பு மற்றும் மக்களிடம் உருவாகியுள்ள நம்பிக்கை ஆகியவை தவெக வளர்ச்சிக்கான முக்கிய காரணங்கள். தமிழக அரசியலில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவராக விஜய் உருவெடுத்துள்ளார்.

இதன் காரணமாகவே இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் தவெக-வை நோக்கி திரண்டு வருகின்றனர்” என தெரிவித்தார்.

திரையுலகின் உச்ச நிலையில் இருந்தபோதும், மக்கள் நலனுக்காகவும் தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்காகவும் தனது புகழையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்து களமிறங்கியுள்ள விஜய் அவர்களின் துணிச்சல் பாராட்டத்தக்கது என்றும், எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் போன்ற மக்கள் தலைவர்களின் அரசியல் எழுச்சியைப் போலவே விஜய் தலைமையிலும் தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயம் உருவாகி வருவதாகவும் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விஜயின் அரசியல் வருகையால் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார அணுகுமுறையால் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் திமுகவிலும் இதேபோன்ற சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் விமர்சனம் முன்வைத்தார்.இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை உற்சாகமூட்டினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today them tomorrow for you Nanjil Sampath warning agitation against DMK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->