அனிதாவுக்கு கூச்சலிட்டவர்கள் தற்போது எங்கே போனீர்கள்? ஹெச் ராஜா ஆவேச பேட்டி.! - Seithipunal
Seithipunal


10 ஆம் வகுப்பில் 489 மதிப்பெண் எடுத்த அரியலூர் மாணவியை மதமாற்றம் செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முயற்சிகள் நடைபெற்றதாக பாஜகவை சேர்ந்த ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையிலுள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில், அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற மாநில மைய குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா, மகாத்மா காந்தியே மதமாற்ற தடை சட்டம் குறித்து பேசி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டம் வேண்டும். ஏனென்றால் மகாத்மா காந்தி அவர்களே சொன்னார்., 'எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால், ஒரு மணி நேரத்தில் எல்லாவிதமான மத மாற்றத்தையும் தடை செய்வேன்' என்று மகாத்மா காந்தி தெரிவித்தார்.

அதனால் மதமாற்ற தடை சட்டம் உடனடியாக கொண்டுவர வேண்டும். 10 ஆம் வகுப்பில் 489 மதிப்பெண் எடுத்த அரியலூர் மாணவியை மதமாற்றம் செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முயற்சிகள் நடைபெற்றுள்ளது. நீட் தேர்வில் தற்கொலை அனிதாவுக்கு கூச்சலிட்டவர்கள் தற்போது எங்கே உள்ளீர்கள்?" என்றும் ஹெச் ராஜா கேள்வி எழுப்பினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H RAJA SAY ABOUT ARIYALUR SCHOOL GIRL SUICIDE


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal