''ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்; உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்''; அமைச்சர் கீர்த்தனாவை கடுமையாக விமர்சித்துள்ள உதயநிதி..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் மருத்துவமனைகள். பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்ததுடன், அதனை வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதன்காரணமாக, தவெக அரசை எதிர்க்கட்சிகள் 'ரீல்ஸ் ஆட்சி' என விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். ஆனால், அந்த மாணவி பதில் சொல்ல முடியாமல் திணறியிருந்தார். அப்போது அருகில் இருந்த ஆசிரியரிடம் முதல் வரிசை மாணவர்களே இவ்வாறு இருந்தால், கடைசி வரிசை (last bench) மாணவர்களை யோசித்து பாருங்கள் என கூறியிருந்தார். 

இதுதொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவிய தற்போது சர்ச்சை ஆகியுள்ளது.  அமைச்சர் கீர்த்தனாவின் இந்த செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது; 

''அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் 'ரீல்ஸ் அமைச்சர்' ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும். 

நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்'' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi has strongly criticized Minister Keerthana saying that he should not use school children for the reels craze


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->