பாதிக்கப்பட்டவர்களுக்குத் தோள் கொடுக்கும் அரசு...! கோவையில் நிகழ்ந்த கோர விபத்து - நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்...! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் 'விஜய்' வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட கிணத்துகடவு வட்டம், பொள்ளாச்சி – பல்லடம் பிரதான சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில் கோர சாலை விபத்து நிகழ்ந்தது.

சேலம் மாவட்டம் காடையம்பட்டியைச் சேர்ந்த தனபால் (37), அவரது மனைவி மேனகா (35), உறவினரான சினேகா (23), மகள் கனிஷ்கா (17) மற்றும் மகன் சுர்ஜித் (12) ஆகியோர் காரில் பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் சாத்தம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் இயக்கிய சரக்கு லாரி, பல்லடத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி அதிவேகத்திலும் கவனக்குறைவுடனும் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரே வந்த காரின் மீது பலத்த தாக்கத்துடன் மோதியதில் வாகனம் சிதறி நொறுங்கியது.இந்த கொடூர விபத்தில் தனபால், மேனகா, சினேகா மற்றும் கனிஷ்கா ஆகியோர் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த துயரத்தையும் அளித்ததாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த சுர்ஜித்துக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சுர்ஜித்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

government supporting victims terrible accident occurred Coimbatore Chief Minister Vijay announced relief


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->