'கோட்' ஒரு சனாதனம்! விசிக ரவிக்குமாரின் புதிய கண்டுபிடிப்பு! கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் தி கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

நடிகர் விஜய் வாழ்க்கையில் இந்த படம் ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அரசியல் கட்சியின் தலைவராக நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் என்பதால் இந்தப் படத்துக்கு அரசியல் ரீதியாகவும் சில எதிர்ப்புகள் விமர்சனங்களாக கிளம்பியுள்ளது. 

குறிப்பாக திமுக அமைச்சர் அன்பரசன் 2000 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யும் விஜய் தான் நாட்டை காப்பாற்ற போகிறாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

திமுகவின் தீவிர ஆதரவாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர், நடிகர் விஜயின் அரசியல் வருகையை கடுமையாக எதிர்த்து பல்வேறு கோணங்களில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் விழுப்புரம் எம்பி ரவிக்குமார், நடிகர் விஜய் திரைப்படத்தின் தலைப்பில் சனாதனம் இருப்பதாக புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்து விமர்சனம் செய்துள்ளார். 

இது குறித்த அவரின் அந்த செய்தி குறிப்பில், விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’?

The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? 

‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! 

‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 

விசிக ரவிக்குமாரின் இந்த விமர்சனம் நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக படத்தின் தலைப்பை வைத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு, அவரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் தான். இப்போது அவரையும் சாதி வெறியர் சனாதன வெறியர் என்று பட்டம் சூட்டுகிறீர்களோ? 

உண்மையில் உங்களுக்கு தான் சாதி வெறியும், சனாதன வெறியும் ஊறிப் போய் உள்ளதாக பதில் விமர்சனங்களை நெட்டிசன்கள் கொடுத்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக், எப்போதும் எல்லோருக்கும் பெரியார் என்று ஐயா ஈ.வெ.ராவை அடையாளப்படுத்துறாங்களே, எல்லோருக்கும் பெரியார் அவர்தான் என்பதும், அது எப்போதும் மாறுபடாது என்பதும் உங்கள் லாஜிக்படி சனாதனம்தான முனைவரே? என்று தெரிவித்துள்ளார்.

விசிக ரவிக்குமாரின் இந்த விமர்சனம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை கமெண்டில் தெரிவியுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goat Vijay movie title vck Ravi Kumar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->