மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஜி கே வாசன் கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்திருப்பதை மத்திய அரசு கண்டிப்பதோடு உடனடியாக மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகளுக்கு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது, அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைப்பிடித்துச் செல்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் ஆண்டாண்டு காலமாக நீடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை.ராமேஸ்வரம் பகுதியில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். 

தமிழகத்தைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்திருப்பதை மத்திய அரசு கண்டிப்பதோடு உடனடியாக மீனவர்களையும், படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளில் இருந்த 43 மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். மேலும் அவர்களின் 6 படகுகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற அராஜகத்தில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் மீனவக் குடும்பங்கள் மனதளவிலும், பொருளாதாரத்தை ஈட்டுவதிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே இனியும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் ஆத்துமீறல் நடைபெறக்கூடாது. மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள 43 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், பறிமுதல் செய்த படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும். இனிமேலும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதை மத்திய அரசு இலங்கை அரசுக்கு கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan statement on dec 19


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->