அஜாக்கிரதையான சம்பவத்துக்கு காரணம் என்ன.? தமிழக அரசுக்கு ஜி கே வாசன் கேள்வி.!! - Seithipunal
Seithipunal


சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது மிகவும் வேதனைக்குரியது. தமிழக அரசு, இதற்கான காரணத்தை கண்டறிந்து இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காவல்துறையின் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் நாரத்தாமலை அருகே காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் இருந்த சிறுவன் மீது குண்டு பாய்ந்ததால் சிறுவனின் பெற்றோர் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள். அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இந்த அஜாக்கிரதையான சம்பவத்துக்கு காரணம் என்ன.?

சி.ஐ.எஸ்.எப். வீரர் ஒருவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது வீட்டில் இருந்த சிறுவன் புகழேந்தி மீது குண்டு பாய்ந்தது எப்படி. காவல்துறையினர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டால் அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். துப்பாக்கிச் சுடும் பயிற்சி என்பது எச்சரிக்கையோடு நடக்க வேண்டும். அதாவது துப்பாக்கி சுடும் பயிற்சி மையம், குண்டு பாயும் தூரம், அப்பகுதிக்குள் எவரும் நுழைவதோ, மக்கள் நடமாட்டமோ, சிறுவர்கள் விளையாட்டோ இருக்கக்கூடாது என்பது மட்டுமல்ல விபரீதம் ஏதும் நடக்காமல் இருப்பதில் மிக அதிக கவனம் செலுத்த  வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற வேண்டும்.?

இது போன்ற ஒரு அஜாக்கிரதையான சம்பவம் இனிமேல் நடைபெறக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கை அமைய வேண்டும்.குண்டு பாய்ந்து, பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் புகழேந்திக்கு உயர்தர சிகிச்சை அளித்து, நல்ல உடல்நலத்துடன் மீட்க வேண்டும்.

தமிழக அரசு, காவல்துறையினரின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தொடர்பாக அதிக முன்னேற்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்த வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk vasan statement for cisf soldiers firing issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->