யாருடனும் கூட்டணியில் இல்லை - ஜி.கே. வாசன் பரபரப்பு பேட்டி..!
gk vasan press meet in dindukal
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் GK வாசன் திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல விழாவிற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
"தமிழ் மாநில காங்கிரசை பொருத்தவரை தற்பொழுது யாருடனும் கூட்டணியில் இல்லை. நாங்கள் மட்டுமல்ல பாமக, தேமுதிக உள்ளிட்ட எந்த கட்சிகளும் கூட்டணியில் இல்லை.
தமிழகத்தில் திமுக கூட்டணி என்று இருக்கிறது. அந்தக் கூட்டணி அகில இந்திய அளவில் இந்தியா என்ற முரன்பாட்டுடைய மொத்த உருவத்திலே உள்ளது. மற்ற கூட்டணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

நாங்கள் ஜனவரி மாதம் தான் கூட்டணி குறித்து அறிவிப்போம். தற்பொழுது நாங்கள் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் நட்பு கட்சியாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வடமாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்றால் சரியான வியூகம் தேவை. யார் எந்த கூட்டணியில் சேர்கிறார்கள் என்று என்னால் கணிக்க முடியாது. ஒத்த கருத்தோடு கடைபிடித்தால் எதிரியை வீழ்த்தலாம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருந்த போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் அதில் இருந்தது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ள நிலையில் தற்போது எந்த கூட்டணியிலும் தமாக இல்லை என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
English Summary
gk vasan press meet in dindukal