தவெக ஆட்சி அமைக்க வழிவிடுங்கள்...முட்டுக்கட்டை போட்டால் போராட்டம் வெடிக்கும்...! - மாணவர் காங்கிரஸ் அதிரடி எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அண்மையில் நிறைவடைந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மக்களிடமிருந்து வலுவான ஆதரவை பெற்று அதிக தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கமும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு தனது அரசியல் ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கூட்டணியை ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் இதுவரை அழைக்காமல் காலதாமதம் செய்வது, மாநில மக்களிடையே ஆழமான ஐயப்பாட்டையும் அரசியல் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஜனநாயக நடைமுறைக்கு எதிரான தாமதத்தின் பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அரசியல் அழுத்தங்கள் செயல்பட்டு வருகின்றன என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக வேரூன்றி வருவதாகவும், இந்த நிலைப்பாட்டை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பை முழுமையாக மதித்து, பெரும்பான்மை பலம் கொண்ட கூட்டணியை உடனடியாக ஆட்சியமைக்க அழைப்பது ஆளுநரின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பு என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டால், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய ஜனநாயக எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Give way formation government if there deadlock protest break out Student Congress warns action


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->