உண்மையை சொல்வதற்கு நான் எந்த நேரத்திலும் தயங்க மாட்டேன் - இளையராஜா.! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா எழுதிய முன்னுரைக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.

ஒருவர் தனது கருத்தை தெரிவிக்க கூட தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லையா? என்ற கேள்வியை முன்வைத்து, இந்த விவகாரத்தில் இளையராஜாவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து ஆதரவு பெருகி வருகின்றது.

இந்த நிலையில், இளையராஜா தன்னிடம் தெரிவித்ததாக அவரின் சகோதரர் கங்கை அமரன் பிரபல செய்தி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது,

"என் பாடல் நல்லா இல்லை என்று சொன்னால்., திரும்பி அதனை வாங்க மாட்டேன். என் மனதில் என்ன இருக்கிறதோ அந்த உண்மையை சொல்வதற்கு நான் எந்த நேரத்திலும் தயங்க மாட்டேன்.

மற்றவர்களுடைய கருத்து எந்த மாதிரியான வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இது என்னுடைய கருத்து. நான் இதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. 

மற்றவர்களுடைய கருத்து எனக்கு பிடிக்காவிட்டாலும், அது எனக்கு பிடிக்கவில்லை என்று நான் சொல்லப் போவதும் இல்லை. 

நான் தெரிவித்த கருத்தை அரசியலாக்க விரும்பவில்லை. பிரதமர் மோடிக்கு வாக்கு செலுத்துங்கள் அல்லது வாக்கு செலுத்த வேண்டாம் என்று நான் சொல்லப் போவதும் இல்லை" என்று இளையராஜா தெரிவித்ததாக கங்கை அமரன் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gangai amaran say about ilayaraja pm modi issue


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->