இனி பாஸ்போர்ட் மட்டும் போதும்...விசாவுக்கு குட்பை...! - இந்தியர்களுக்குப் பிரான்ஸ் அரசு கொடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் வழியாகப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு விசா இல்லா இடைநிலைப் பயண (transit) வசதி தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த தீர்மானம், இந்தியா-பிரான்ஸ் உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் வெளிப்படுத்திய உறுதியான நம்பிக்கையும், நீண்டநாள் கூட்டாண்மைக்கும் பிரதிபலிப்பாக விளங்குகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த முன்னேற்றமான நடவடிக்கையை இந்தியா மனமார வரவேற்கிறது என்றும், இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மும்பையில் நடைபெற்ற இருநாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது, இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கான இடைநிலை விசா கட்டாயத்தை நீக்குவது குறித்து ஒப்புதல் எட்டப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய மாற்றம், இந்திய பயணிகளுக்கான சர்வதேசப் பயணத்தை எளிதாக்கும் புதிய பாதையை உருவாக்குகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

only passport enough no need visa Official announcement from French government Indians


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->