கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டுத் தற்கொலை...! கண்ணீரில் தந்தை...! - என்ன நடந்தது...?
student who returned home after completing college committed suicide by hanging herself Father tears What happened
முத்தியால்பேட்டை பகுதியில் வசித்து வந்த தினேஷ் (43) ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி கலைச்செல்வி (40). இவர்களின் மகளான நித்யஸ்ரீ (19), அரசு நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார்.
இந்த நிலையில், வழக்கம்போல் கல்லூரி சென்று மாலை வீட்டிற்கு திரும்பிய நித்யஸ்ரீ, பின்னர் வீட்டின் ஒரு அறைக்குள் சென்றார். சில நேரத்திற்குப் பிறகு, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த சம்பவம் குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முத்தியால்பேட்டை காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் துயரமான முடிவிற்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் நிலவியது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
student who returned home after completing college committed suicide by hanging herself Father tears What happened