மாஸ் கட்டிய கொங்கு மண்டலம்...! - வாக்குப்பதிவில் முதலிடம் பிடித்து சாதனை...!
Kongu Mandal built by Mass Achieved record by winning first place voting
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல், நேற்று மாநிலம் முழுவதும் உற்சாகமாகவும் அமைதியாகவும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களமிறங்கி வாக்காளர்களின் ஆதரவை நாடினர்.

இதற்காக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.மக்களின் ஆர்வமிகு பங்கேற்பை பிரதிபலிக்கும் வகையில், தமிழகத்தில் மொத்தம் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டல மாவட்டங்கள் வாக்குப்பதிவில் முன்னிலை வகித்துள்ளன.
மாநில அளவில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.63% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.அதைத் தொடர்ந்து சேலம் 90.76%, நாமக்கல் 90.21%, ஈரோடு 90.10% என 90 சதவீதத்தைத் தாண்டிய அனைத்து மாவட்டங்களும் மேற்கு மண்டலத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மாறாக, தென் மாவட்டங்களில் வாக்குப்பதிவு சற்றே குறைவாக காணப்பட்டது. தமிழகத்தில் மிகக் குறைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல் ராமநாதபுரம் 77.01%, திருநெல்வேலி 77.94%, தூத்துக்குடி 80.53%, தென்காசி 82.41% எனவும் பதிவாகியுள்ளது.
மேலும், சிவகங்கை 76.66%, மதுரை 80.52%, தேனி 81.55%, விருதுநகர் 84.82% என தென் மாவட்டங்களில் எங்கும் 85% வாக்குப்பதிவை எட்டாத நிலை காணப்படுகிறது. இதன் மூலம், தமிழகத்தில் மண்டல வாரியாக வாக்காளர் ஈடுபாட்டில் கணிசமான வேறுபாடு நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Kongu Mandal built by Mass Achieved record by winning first place voting