கூகுள் பே, போன் பே-வுக்கு டஃப் கொடுக்கும் வாட்ஸ்அப்...! ரீசார்ஜ் வசதி அறிமுகம்...! - முழு விவரம் வேண்டுமா...? - Seithipunal
Seithipunal


இன்றைய டிஜிட்டல் உலகில் தவிர்க்க முடியாத தொடர்பு சாதனமாக வாட்ஸ் அப் திகழ்கிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 51 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருவது அதன் அபார வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

2009 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த செயலி, 2014 ஆம் ஆண்டு மெட்டா நிறுவனத்தின் கீழ் சென்றதையடுத்து தொடர்ந்து புதுமையான அம்சங்களால் பயனர்களை ஈர்த்து வருகிறது.

மேலும், ஆடியோ, வீடியோ அழைப்புகள் முதல் பல்வேறு கோப்புகளை உடனுக்குடன் பகிரும் வசதி வரை, தகவல் பரிமாற்றத்தை எளிமையாக்கிய வாட்ஸ் அப், யுபிஐ வசதியையும் இணைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையிலும் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில், பயனர்களை மேலும் கவரும் வகையில் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.

அதன்படி, வாட்ஸ் அப் யுபிஐ மூலம் மொபைல் போன் ரீசார்ஜ் செய்யும் வசதி தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ, வோடோபோன் போன்ற முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளுக்கு நேரடியாக வாட்ஸ் அப் செயலியிலேயே ரீசார்ஜ் செய்யும் வசதி கிடைக்கிறது.

மேலும், பிஎஸ்.என்.எல். பயனர்களுக்கும் விரைவில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒரே செயலியில் தகவல் பரிமாற்றமும், பணப்பரிவர்த்தனையும், ரீசார்ஜ் சேவைகளும் ஒருங்கிணைந்து, பயனர்களுக்கு இன்னும் வசதியான டிஜிட்டல் அனுபவத்தை வழங்குகிறது என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

WhatsApp gives tough fight Google Pay Phone Pay Recharge facility introduced Want full details


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->