Freedom Fighter : நம் மனதில் நீங்கா இடம் பிடித்த.. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முதல் குடியரசு தலைவர்:

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் பலர் உள்ளனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, இந்திய வரலாற்றில் அழிக்கமுடியாத இடங்களை பிடித்தவர்களும், நம் மனதில் தடம் பதித்தவர்களும் வெகு சிலரே. அவ்வாறு நம் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒருவரைப் பற்றி தான் இன்று நாம் காண இருக்கின்றோம்.!

பிறப்பு :

டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1884ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி பீகாரில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் மகாதேவ் சாகி, தாயார் பெயர் கமலேஸ்வரி தேவி ஆகும். இவருக்கு உடன் பிறந்தவர்கள் மகேந்திர பிரசாத் என்னும் மூத்த சகோதரரும், பகவதி தேவி என்னும் மூத்த சகோதரியும் ஆவார்.

கல்வி :

இவர் டி.கே. பாட்னாவில் உள்ள கோஷ் அகாடமியில் இரண்டு வருட காலம் படித்தார். 1902ஆம் ஆண்டு ராஜேந்திர பிரசாத், பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். பின் 1905ஆம் ஆண்டு முதல் பிரிவில் பட்டம் பெற்றார். 1907ஆம் ஆண்டு எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். 1937ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆசிரியராக பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றினார். பீகாரில் உள்ள பிரபல பட்டு நகரமான பாகல்பூரில் சட்டம் பயின்றார்.

திருமண வாழ்க்கை :

ராஜேந்திர பிரசாத் 1896ஆம் ஆண்டு ஜூன் மாதம், தனது 12வது வயதில் ராஜவன்ஷி தேவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார்.

விடுதலை போராட்டத்தில் ராஜேந்திர பிரசாத்தின் பங்கு :

மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் உறுதியால் ராஜேந்திர பிரசாத் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1920ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டவுடன், ராஜேந்திர பிரசாத் தனது வழக்கறிஞர் வாழ்க்கையிலும், பல்கலைக்கழகத்தில் தனது கடமைகளிலும் இருந்து ஓய்வு பெற்று ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.

பல போராட்டங்களில் கலந்து கொண்ட ராஜேந்திர பிரசாத் மக்களுக்காக தனது குரலினை உயர்த்தினார். அக்டோபர் 1934ஆம் ஆண்டு நடந்த மும்பை அமர்வின்போது ராஜேந்திர பிரசாத் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1939ல் பதவி விலகியபோது ராஜேந்திர பிரசாத் மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947ஆம் ஆண்டு ஜே.பி.கிருபாலனி தனது ராஜினாமாவை சமர்ப்பித்த பின்னர் மூன்றாவது முறையாக ராஜேந்திர பிரசாத் காங்கிரஸ் தலைவரானார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பின், 1950ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, இந்தியா முழு குடியரசு நாடாக மாறியது. 1950ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவில் குடியரசு தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், ராஜேந்திர பிரசாத் ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை அறிவித்தார்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் மறைவு :

குடியரசு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற சில மாதங்களிலே அவரது உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டார்.

இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்கள், 1963ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி பீகாரில் உள்ள பாட்னா என்ற இடத்தில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

freedom fighter rajenthira prasath 2022


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->