#சற்றுமுன் : அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே பாண்டியன் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் வலது கையாக விளங்கிய தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே பாண்டியன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலும் சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியை அடைந்தது. 24 ஆண்டுகளாக தொடர்ந்து ஒடிசா மாநில முதலமைச்சர் ஆக நவீன் பட்நாயக் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓடிஸா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே பாண்டியன்தான் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், வி.கே பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என நவீன் பட்நாயக் தெரிவித்தார். இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று பதவி ஏற்கிறார்.

இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே பாண்டியன் அரசியலில் இருந்து விலகுவதாக காணொளி காட்சி மூலம் தெரிவித்துள்ளார். அதில் வி.கே பாண்டியன் பேசுகையில், ஒடிசா தேர்தல் தோல்விக்கு நான் காரணம் என கருதினால் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். முதலமைச்சர் நவீன் பட்நாயக்கு உதவி செய்யவே அரசியலுக்கு வந்ததாக கூறினார். விகே பாண்டியன் வீடியோ மூலம் அரசியலில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ள காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former IAS officer VK Pandian announced his retirement from politics


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->