கொங்கு மண்டலத்தில் திமுகக்கு சாதக காற்று – உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!செந்தில் பாலாஜியால் உற்சாகமான ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் திமுக தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் கிடைத்துள்ள உளவுத்துறை அறிக்கை கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின் படி, கோவையின் இரண்டு முக்கிய தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 சட்டசபைத் தேர்தலில் கொங்கு மண்டலம் திமுகவுக்கு கடும் சவாலாக அமைந்தது. கொங்கு மண்டலத்தில் உள்ள 68 தொகுதிகளில் வெறும் 24 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி கைப்பற்றியது. இதனால் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்தே, கொங்கு மண்டலத்தை மீட்கும் நோக்கில் திமுக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் பல்வேறு முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஜி.டி. நாயுடு மேம்பாலம், உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டல், செம்மொழி பூங்கா, சர்வதேச ஹாக்கி மைதானம் போன்ற திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பெரியார் நூலகம், சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றுக்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதனுடன் சமூக ரீதியிலான அரசியல் கணக்குகளையும் திமுக இம்முறை கவனமாகச் சரி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை மாவட்ட பொறுப்பு வழங்கப்பட்டதும், கட்சியினரிடையே கூடுதல் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கோவையில் முதன்முறையாக சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகத்தை அமைத்து, களப்பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு பின்னணி காரணமாக உளவுத்துறை மூலம் கிடைத்த அறிக்கை இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த அறிக்கையின் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் சிங்காநல்லூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய இரு தொகுதிகள் திமுக வசம் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் இந்த முறை கடும் போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களே திமுகவினரை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளன.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, இன்னும் சில தொகுதிகளும் திமுகவுக்கு சாதகமாக மாறும் என்ற நம்பிக்கையில், கட்சியினர் முழுவீச்சில் பணியாற்ற தொடங்கியுள்ளனர். மேலும் நடிகர் விஜயின் அரசியல் நகர்வுகள் காரணமாக பிரியும் வாக்குகள், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கே சாதகமாக அமையும் என்றும் அரசியல் நிலவரங்களை கவனித்து வரும் வட்டாரங்கள் கூறுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Favorable winds for DMK in Kongu zone Intelligence report Stalin excited by Senthil Balaji


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->