போலி வெடிகுண்டு மிரட்டல்...! சமூக அமைதியை குலைக்கும் ஆபத்தான விளையாட்டு! - செல்வப்பெருந்தகை கடும் எச்சரிக்கை
Fake bomb threat dangerous game that disrupts social peace Selvaperundakai warns strongly
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சமீபத்தில் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் வெளியிட்டுள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளன.அவர் தனது பதிவில் குறிப்பிட்டதாவது,"சமீபகாலமாக தினந்தோறும் மாநிலத்தின் பல பகுதிகளில் போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரவி வருகின்றன.

பள்ளிகள், விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், அரசியல் கட்சிகளின் தலைமையகங்கள், அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் மட்டுமல்லாமல், நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வரை இமெயில் மூலம் மிரட்டல் செய்திகள் வந்துகொண்டிருப்பது மிகவும் கவலைக்குரியது.
இது சமூகத்தில் அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்கும் ஆபத்தான செயல். இத்தகைய போலி தகவல்களை பரப்புபவர்கள் சட்ட ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் கண்டிக்கத்தக்கவர்கள்.இந்தப் பொய்யான தகவல்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தேவையற்ற சுமையையும், உண்மையான அவசரநிலைகளில் தாமதத்தையும் ஏற்படுத்துகின்றன.
பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்யும் அதிகாரிகளை மதிக்காமல், போலி அவசர சூழ்நிலை உருவாக்குவது, நாட்டின் நம்பிக்கையையும் சட்ட ஒழுங்கையும் பாதிக்கும் செயல் ஆகும்.நிலவிற்கு ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்ப திறனை கொண்ட இந்தியா, இத்தகைய மிரட்டல்களின் மூலத்தை கண்டறிய முடியாதா? என்ற கேள்வியும் எழுகிறது.
எனவே, இப்படிப் போலி மிரட்டல்கள் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.மக்கள் அனைவரும் அறிவு மற்றும் பொறுப்பு உணர்வுடன், சமூக வலைதளங்களில் எந்த தகவலையும் உறுதி செய்யாமல் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.
சமூக அமைதியை குலைக்கும் போலி செய்திகளுக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிராக நிற்பதே உண்மையான தேசபற்று,” எனத் தெரிவித்தார் செல்வப்பெருந்தகை.
English Summary
Fake bomb threat dangerous game that disrupts social peace Selvaperundakai warns strongly