சச்சினின் உலக சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மீது பல விமர்சனங்கள் எழுந்திருந்தன. ஆனால், அவற்றை பொருட்படுத்தாமல் களமிறங்கிய ரோகித் சர்மா தனது பேட்டிங் திறமையால் ரசிகர்களை கவர்ந்தார். ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்து தனது திறனை மீண்டும் நிரூபித்தார்.

அவரது சிறப்பான ஆட்டத்திற்காக தொடரின் சிறந்த வீரராக (Player of the Series) ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, ஐசிசி வெளியிட்ட ஒருநாள் பேட்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்தார். இதுவே அவரது முதல் முறை நம்பர் ஒன் இடத்தை அடைவதாகும்.

மேலும், அதிக வயதில் முதலிடம் பிடித்த பேட்டராக ரோகித் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் தனது 38 வயதில் (38Y, 73D) டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தார். தற்போது ரோகித் 38 வயது 182 நாட்களில் ODI பேட்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து சச்சினை முந்தியுள்ளார்.

மேலும், அதிக போட்டிகளில் விளையாடி முதலிடத்தை அடைந்த பேட்டராகவும் ரோகித் சாதனை படைத்துள்ளார். 268 போட்டிகளுக்குப் பிறகே அவர் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இதே பட்டியலில் குறைந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர் எம்.எஸ். தோனி. அவர் வெறும் 38 போட்டிகளில் விளையாடியபோது முதலிடத்தை பிடித்தார்.

அவரைத் தொடர்ந்து சுப்மன் கில் (41 போட்டி), சச்சின் டெண்டுல்கர் (102 போட்டி), விராட் கோலி (112 போட்டி), ரோகித் சர்மா (268 போட்டி) ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rohit sharma ODI Match ICC rank


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->