தவெகவில் கோஷ்டி மோதல்.. புஸ்ஸி ஆனந்தை கண்டித்த விஜய்? ஒரு கூட்டத்தை கூட நடத்த தெரியாதா? விஜய் எடுத்த முக்கிய முடிவு! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விவகாரங்கள் வெளியே கசிந்ததைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கட்சி தலைவர் விஜய் கடுமையாக கண்டித்ததாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக தவெக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. இருப்பினும், பாஜகவை “கொள்கை எதிரி” என முன்பு விமர்சித்திருந்த நிலையில், அந்த கூட்டணியில் சேர்வதில் விஜய் ஆரம்பத்தில் விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பாஜக தரப்புடன் பேசும் சூழலில், விஜய் தரப்பில் 90 தொகுதிகள் மற்றும் முதல்வர் பதவி போன்ற பெரிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த கோரிக்கைகள் காரணமாக பாஜகவே பின்வாங்கும் என்ற கணக்கில் விஜய் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பனையூரில் நடைபெறும் உட்கட்சி குழப்பங்கள் காரணமாக புஸ்ஸி ஆனந்த் தனியாக மாற்று அரசியல் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தகவல்களின் படி, விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவும், அவரின் நெருங்கியவர் ஆதவ் அர்ஜுனா அருகிலுள்ள விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், தி.நகர் தொகுதியில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்துக்கு வெற்றி பெறுவது சவாலாக இருக்கும் என்பதால், அங்கு ஏற்கனவே பணியாற்றி வரும் பாஜக அமைப்பின் ஆதரவைப் பெற முயற்சி செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழியாக தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் உடனடியாக வெளியே கசிந்ததால், இது கட்சிக்கு அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. குறிப்பாக “கொள்கை எதிரி” என கூறிய பாஜகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்ற விமர்சனங்களுக்கு இது வழிவகுத்தது.

இந்த சூழ்நிலையில், விஜய் பனையூர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்தை கடுமையாக கண்டித்ததாகவும், “ஒரு மாவட்டச் செயலாளர் கூட்டத்தையே ரகசியமாக நடத்த முடியாதா?” என்று கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, ஏற்பட்ட சர்ச்சையை சமாளிக்கும் வகையில் புஸ்ஸி ஆனந்த் பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் சென்னையில் தவெக நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளை விரைவாக ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், பாஜக கூட்டணி குறித்த யூகங்களை முறியடிக்கும் முயற்சியாக, சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஜய் காரின் சன் ரூஃபில் நின்று மக்களுக்கு கையசைத்து ஆதரவை பெற்றது போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. இதனுடன், கட்சி தரப்பில் விளக்க அறிக்கையும் வெளியிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தவெக உட்புற அரசியல் மற்றும் கூட்டணி விவகாரம் தொடர்பான பரபரப்பு தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Factional clash in Thaveka Vijay condemned Pussy Anand Doesnot he know how to even hold a meeting Vijay important decision


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->