தவெக அமைச்சரவை விரிவாக்கம்?.. தவெக அமைச்சரவையில் இடம்பெறும் 7 அதிமுக எம்எல்ஏக்கள்? - கசிந்த ரகசிய லிஸ்ட்! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்று, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்தகட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் குறித்த பரபரப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே பதவியேற்ற 9 அமைச்சர்களுக்கு முழுமையான இலாக்காக்கள் இன்னும் ஒதுக்கப்படாத நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிருப்தி குழுவினருக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டை வட்டார தகவல்படி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள அதிமுக மூத்த தலைவர்கள் 7 பேருக்கு அமைச்சரவை இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எஸ்.பி. வேலுமணி

கோவை மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய சக்தியாக இருந்த எஸ்.பி. வேலுமணி, தற்போது தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் அணியின் முக்கிய முகமாக உள்ளார். இவருக்கு உள்ளாட்சித்துறை அல்லது நெடுஞ்சாலைத்துறை போன்ற முக்கிய இலாக்காக்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.வி. சண்முகம்

வட தமிழகத்தில் செல்வாக்கு கொண்ட சி.வி. சண்முகம், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெளிப்படையாக பேசியவர். சட்டம் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட இவருக்கு மீண்டும் சட்டத்துறை அல்லது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

சி. விஜயபாஸ்கர்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான சி. விஜயபாஸ்கர், கொரோனா காலத்தில் சுகாதார நிர்வாகத்தை கையாள்ந்த அனுபவம் கொண்டவர். இவருக்கு மீண்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர். காமராஜ்

டெல்டா பகுதியின் முக்கிய அதிமுக தலைவர்களில் ஒருவரான ஆர். காமராஜுக்கு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கே.சி. வீரமணி

முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரான கே.சி. வீரமணி, தற்போது தவெக ஆதரவு அணியில் இணைந்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் அனுபவம் கொண்ட இவருக்கு நிதி அல்லது வணிகவரித்துறை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

நத்தம் விஸ்வநாதன்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர். இவருக்கு மீண்டும் மின்சாரத்துறை அல்லது சுங்கத்துறை போன்ற முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.பி. அன்பழகன்

மேற்கு மண்டலத்தில் செல்வாக்கு கொண்ட கே.பி. அன்பழகன், உயர்கல்வி அல்லது பள்ளிக்கல்வித்துறைக்கு பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் இந்த 7 பேரும் இணைந்தால், விஜய் அரசுக்கு அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் அதிகரிக்கும் என பார்க்கப்படுகிறது.

ஆனால் மறுபுறம், “பழைய அதிமுக அமைச்சர்களையே நம்பி ஆட்சி நடத்துகிறாரா விஜய்?” என்ற விமர்சனத்தையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக இருந்த ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக தொடர்ந்து நினைவூட்டும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதிய அமைச்சரவை விரிவாக்கப் பட்டியல் விரைவில் ஆளுநருக்கு அனுப்பப்படலாம் என்றும், அடுத்த சில நாட்களில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Expansion of the tvk cabinet 7 AIADMK MLAs to be included in the tvk cabinet Leaked secret list


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->