கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கஞ்சா.. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது - எடப்பாடி கே பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal


அம்மா மினி கிளினிக் மூடப்பட்ட விவகாரம் மற்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்ததாவது, "தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கஞ்சா, போதைபொருள் தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் சென்று விட்டது.

இன்றைக்கு அதிமுகவினரை போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்கின்றனர். ஆனால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், எங்கு கொண்டு வைத்தார்கள் என்றே தெரியவில்லை. தமிழக போலீஸ் திமுகவின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை சரிசெய்ய முதலமைச்சர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் தமிழகம் தவித்து வருகிறது.

ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் பயன் அளித்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

தமிழகம் மற்றும் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த திமுக அரசை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. சென்ற ஆண்டு அதிமுக தலைமையிலான என்னுடைய ஆட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் தொகுப்பின் போது 2500 ரூபாய் நிவாரணம் வழங்கினோம். ஆனால் இந்த திமுக அரசு ஒரு ரூபாய் கூட நிவாரணமாக மக்களுக்கு வழங்காமல் ஏமாற்றிவிட்டது.

தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லாத ஒரு ஆட்சி நடைபெற்று வருவதாக எடப்பாடி கே பழனிசாமி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EX CM EPS Say About DMK Govt Worst jan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->