நீட் விவகாரம் : சவாலுக்கு தயார்., ஸ்டாலினுக்கு எடப்பாடி அழைப்பு.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் வைத்து அவர் பேசியதாவது, "நீட் தேர்வை ரத்து செய்வதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம். அப்போதிருந்த காங்கிரஸ் ஆட்சியிலேயே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம்.

நீட் தேர்வு செய்ய வேண்டாம்., நாம் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் நீட் தேர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்று, பலமுறை பிராமருக்கு அம்மா அவர்கள் கடிதம் எழுதினார்கள்.

ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. 2013ம் ஆண்டு பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையில், மூன்று பேரில் கொண்ட அமர்வில் இந்த நீட்தேர்வு ரத்து வழக்கு விவகாரத்தை எடுத்து விசாரிக்கும் போது, இரண்டு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஒரு தீர்ப்பை வழங்கினார்கள். அதில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற தீர்ப்பை அவர்கள் வழங்குகிறார்கள்.

இந்த இந்த பிரச்சினை அதோடு நிறுத்தியிருந்தால், பிரச்சினையே இல்லை. ஆனால், அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. அதில் அங்கம் வகித்த திராவிட முன்னேற்ற கழகம்,, அமைச்சரவையில் அங்கம் வகித்து இருந்த திராவிட முன்னேற்றக் கழகம்., அந்த காலகட்டத்தில் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றை போட்டது.

காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தான் அதனை செய்தது. நீங்கள் மறுக்க முடியுமா?ஸ்டாலின் அவர்களே., அப்போது முதலமைச்சராக இருந்த அம்மா சொல்கிறார்., இது நம்முடையமாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்., இதனால் பெற்றோர்கள் பாதிக்கப்பட்டு விடுவார்கள்., ஆகவே அருள்கூர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இடத்தில் கோரிக்கை வைத்தார். அன்றைய பாரத பிரதமர் இடத்தில் கோரிக்கை வைத்தார். உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போட வேண்டாம் என்று தடுத்து நிறுத்துங்கள்., அதற்காக ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் செம்மலை இடத்தில் அம்மா கடிதம் கொடுத்து அனுப்பினார். 

அதைக்கூட அவர்கள் எல்லாம் பொருட்படுத்தாமல், காங்கிரஸ் கட்சியும், திமுகவும் அன்றைய மத்தியில் ஆளுகின்ற இடத்தில் இருந்து கொண்டு அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போட்டது தான், தமிழகத்தில் நீட் தேர்வு வந்தது.

ஸ்டாலின் அவர்கள் பல்வேறு சவால்களை விடுகிறார்கள்., நேற்றைய தினம் கூட ஒரு சவால் விட்டிருக்கிறார்., தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது., சவால் விட்டிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், மரியாதைக்குரிய அண்ணன் ஓபிஎஸ் அவர்களும் என்னுடைய சவாலை ஏற்று வருவீர்களா? என்று கேட்கிறார்.

நிச்சயமாக உங்களுடைய சவாலை ஏற்றுக்கொள்கிறோம். மக்களின் மத்தியில் நீட் தேர்வு எந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது., யாருடைய ஆட்சியில் அது வருவதற்கு நச்சு விதை தமிழகத்தில் ஊன்றப்பட்டது., நாங்கள் தயார்., ஒரு பொதுவான இடத்தை நீங்களே அறிவியுங்கள்., ஊடக நண்பர்களும், பத்திரிக்கை நண்பர்களும் அங்கு வரவழைத்து, நீட் தேர்வை பற்றி அலசி ஆராய்ந்து நீங்களும் பேசுங்கள்., நாங்களும் பேசுகிறோம்., மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பை வழங்கட்டும். 

யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்., எதையாவது சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார்கள் திமுகவினர்" என்று எடப்பாடி கே பழனிசாமி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps say about neet issue feb


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->