அதிமுக வேட்பாளர்களுடன் இபிஎஸ் திடீர் ஆலோசனை.!! பரபரக்கும் எம்ஜிஆர் மாளிகை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற்ற முடிந்த மக்களவைப் பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 15 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் அதிமுக இரண்டாம் இடம் பிடிக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சில நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து தனது உளவு துறை மூலம் விசாரித்த எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் முடிவு வெளிவான பிறகு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் மக்களவைப் பொதுத் தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். 

சென்னை மற்றும் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் அவர்கள் தொகுதி பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் இன்று அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று காலை 10:30 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னையில் அதிமுகவுக்கான வெற்றி வாய்ப்பு மற்றும் நிர்வாகிகளில் செயல்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிய உள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS discuss with Aiadmk candidates in Chennai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->