துணிச்சல் இல்லையா? ஏன் கூட்டணி வச்சிருக்கீங்க? ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர் "ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்கட்சியாக இருந்தாலும் சரி காவிரி விவகாரத்தில் திமுக உறுதியுடன் இருக்கும்.

தமிழகத்தின் பங்கு நீர் 9.19 டிம்எம்சி கிடைக்கவேண்டிய நிலையில் 2.283 டிஎம்சி மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. மத்திய அமைச்சரை சந்தித்து நீர்வளத்துறை அமைச்சர் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை. கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளிலும் நீர்வரத்து போதுமானதாக இருந்த போதிலும் நீர் திறக்கவில்லை.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளால்  ஜூலை 21 ஆம் தேதி கபினி அணையிலிருந்து அடுத்த 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக மாநில அரசுக்கு உத்துவிடப்பட்டது. சட்ட வல்லுநர்களுக்கு ஆலோசித்து நீரை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்" என உறுதி அளித்துள்ளார்.

இந்த தனி தீர்மானம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி "உச்சநீதிமன்றம் தீர்ப்பை கர்நாடக அரசு ஏன் அமல்படுத்தவில்லை. கர்நாடகாவில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தின் போது காவிரி விவகாரம் குறித்து முதல்வர் பேசி இருக்கலாம். காவிரி விவகாரம் தொடர்பாக 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள திமுக கூட்டணி ஏன் அங்கு பேசவில்லை? ஏன் நாடாளுமன்றத்தை முடுக்கவில்லை? என கேள்வி காட்டமாக எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க ஸ்டாலின் "ஆதாரம் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எதுவேணாலும் பேசலாம் என பேசக்கூடாது. இதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கான மரபா? ஆதாரத்தை நான் காட்டாவா? நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது" என எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுத்தார்.

அடுத்த கேள்விக்கு தயாரான எடப்பாடி "அர்த்தம் கொடுத்தோம் என சொன்னால் மட்டும் போதாது? பட்ட பேரவையில் காவிரி ஓவரா குறித்து கேள்வி எழுப்ப எங்களுக்கு உரிமை இல்லையா?" என கேள்வி எழுப்ப "அனைவரும் அனைத்து உரிமையும் உண்டு. தவறான தகவலை இங்கு பதிவிடக்கூடாது. அதற்குதான் பதிலளித்தேன். இவ்வளவு நேரம் நான் அமைதியாகத்தான் இருந்தேன்"என பதிலளிக்க அருகில் இருந்த துரைமுருகன் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து எழுந்தார்.

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசிடம் பேச வேண்டும் என கூறுவது தற்கொலைக்கு சமம். அறியாமையின் வெளிப்பாடு என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் சமாளிக்க, பின்னர் ஏன் கூட்டணி வச்சிருக்கீங்க?, எங்க ஆட்சியில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது அவதூறு வழக்கு தொடுத்தோம். அந்த துணிச்சல் எங்களுக்கு இருந்தது ? ஏன் உங்களுக்கு இல்லை? என ரவுண்டு கட்டினார்.

இதனை எடுத்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துணிச்சலை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அது என்ன துணிச்சல் என்பது எங்களுக்கு தெரியும் என்ற பதிலடியோடு காரசாரமான விவாதம் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS argue with MKStalin regards cauvery issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->