கேரளாவில் தேர்தல் தோல்வி அதிர்ச்சி....! – காங்கிரஸ் பெண் வேட்பாளர் சினி மரணம்
Election defeat Kerala shock Congress woman candidate Sini dies
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகளில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜனதா கைப்பற்றியது, இது மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், இடவக்கோடு வார்டில், கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வெற்றி பெற்றிருந்த சி.எம்.பி. கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் சினி, இந்த முறையும் மீண்டும் களமிறங்கினார்.

தொடர்ச்சியான வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.ஆனால், இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சுவாதி, 1,889 வாக்குகள் பெற்று அதிர்ச்சி வெற்றியை பதிவு செய்தார். சினி 1,863 வாக்குகள் பெற்ற நிலையில், வெறும் 26 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.
இந்த குறுகிய வாக்கு வித்தியாசம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.இந்த வார்டில், சினி என்ற அதே பெயரில் மேலும் இரண்டு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். அவர்களுக்கு மொத்தமாக 44 வாக்குகள் கிடைத்ததாகவும், இதுவே சினியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த எதிர்பாராத தோல்வி சினியை கடுமையாக பாதித்ததாக கூறப்படும் நிலையில், அவர் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி சினி பரிதாபமாக உயிரிழந்தார்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள், திடீர் மாரடைப்பே மரணத்திற்குக் காரணம் என தெரிவித்தனர். இந்த துயரச் சம்பவம், கட்சி தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் ஆழ்ந்த அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Election defeat Kerala shock Congress woman candidate Sini dies