திருச்சி–சென்னை விமான சேவைகள் பெரும்பகுதி ரத்து…! 10.35 மற்றும் 5.55 சேவைகள் மட்டும் இயக்கம்...!
Trichy Chennai flight services cancelled Only 10point35 and 5point55 services operate
திருச்சி சர்வதேச விமான நிலையம் தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகளில் மிகவும் முக்கியமாக செயல்படுகிறது. வெளிநாட்டுச் சேவைகளில், குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நகரங்களுக்கு நேரடி விமான சேவைகள் வழங்கப்படுகின்றன.
உள்நாட்டு சேவைகளில், டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு தொடர்ந்து விமான சேவைகள் இயங்கிவருகின்றன. இந்நிலையில், இந்த சேவைகளை இண்டிகோ விமான நிறுவனம் இயக்குகிறது. சேவைகளில் பயன்படுத்தப்படும் விமானங்கள் ஏ.டி.ஆர் வகை விமானங்கள் ஆகும்.

திருச்சி – சென்னை உள்நாட்டு மார்க்கில், இதுவரை தினமும் காலை 7.35, 10.35, 12.40, 2.55, இரவு 7.45 மற்றும் 10.15 மணிகளில் விமான சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது இந்த சேவைகள் பெரும்பான்மையிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளை (16-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை, காலை 10.35 மற்றும் மாலை 5.55 மணிக்கு மட்டுமே திருச்சி – சென்னை விமான சேவை இயங்கும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சேவைகள் அதிக இருக்கை கொண்ட ஏர்பஸ் விமானங்களில் இயங்குவதால், பொதுமக்களுக்கு விடுமுறை காலங்களில் கூடுதல் வசதியுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
English Summary
Trichy Chennai flight services cancelled Only 10point35 and 5point55 services operate