செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணையம்! வாக்காளர் பட்டியல் சர்ச்சைக்கு விளக்கம் அளிக்க முடிவு?!
Election commission Voter List Rahul Gandhi Congress bjp
இந்திய தேர்தல் ஆணையம் நாளை (ஆகஸ்ட் 17) பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளது.
சமீபத்தில் தேர்தல் ஆணையத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தை குறிவைத்து "வாக்கு திருட்டு" குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அதேசமயம், பீகார் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்குள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் போது 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சூழலில், நாளைய செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Election commission Voter List Rahul Gandhi Congress bjp